சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இருந்தவர் கோடீஸ்வரர் ஆனது எப்படி?

சொற்ப பணத்தோடு தனது நாட்டில் இருந்து வெளியேறி வீடு இல்லாமல் பார்க் பெஞ்சில் படுத்திருந்த நபர் தற்போது பெரும் கோடீஸ்வரராக ஆகியுள்ளார்.

ரோமானியாவை சேர்ந்தவர் நிக் மோகுடா (37). இவர் தனது 21 வயதில் $500 பணத்துடன் அமெரிக்காவுக்கு கிளம்பி சென்றார்.

அங்கு நிக்குக்கு தங்க இடம் கிடைக்காமல் பார்க் பெஞ்சுகளில் படுத்து உறங்கினார்.

ஒரு வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்ட அவருக்கு இன்று சொந்த 100 வீடுகள், 4 சொகுசு கார்கள் உள்ளது. இது எப்படி சாத்தியமானது? இதற்கு நிக் தனது வாயால் விளக்கம் தருகிறார்.

ரோமானியாவில் இருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வந்தேன், நான் நகருக்குள் வாகனத்தில் நுழைவதற்கே $100 செலவாகிவிட்டது.

எனக்கு தங்குவதற்கு வீடு எதுவும் கிடைக்கவில்லை. ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட சிரமப்பட்டேன், எனக்கு சுத்தமாக ஆங்கிலம் பேச தெரியாததால் வேலை எதுவும் உடனடியாக கிடைக்கவில்லை.

பின்னர் கிடைத்த சிறிய வேலைகளை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை சேமித்தேன். பல நாட்கள் பார்க் பெஞ்சுகளில் படுத்திருந்த எனக்கு தங்ககுவதற்கு சிறிய வீடு கிடைத்தது.

அடுத்த சில ஆண்டுகளில் ஆங்கிலம் பேசவும், எழுதவும் கற்று கொண்டேன். கடந்த 2013ல் eBay இல் இறக்குமதி செய்யப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் விற்பனையை பரிசோதிக்க முடிவு செய்தேன்.

அந்த வியாபாரத்தில் அடுத்த ஆறு மாதத்தில் மாதம் $3,000-$4,000 என்ற அளவில் வருமானம் வந்தது.

ஏற்கனவே ரியல் எஸ்டேட் வேலை செய்த நிலையில் அதை முழுவதுமாக விட்டு முழுவதுமாக இதே வேலையில் இறங்கினேன்.

தற்போது அமேசான் மற்றும் வால்மார்ட் போன்ற தளங்களில் பல ஆன்லைன் ஸ்டோர்களைக் வைத்துள்ளேன் என கூறியுள்ளார்.

நிக் தனது கடின உழைப்பால் பல கோடிகளை வருவாயாக ஈட்டியுள்ளார். அமெரிக்கா மற்றும் ருமேனியாவில் 100 அடுக்குமாடி குடியிருப்புகளையும் நான்கு சொகுசு கார்களையும் வைத்துள்ள நிக், தனது தந்தை மற்றும் சகோதரருக்கு தலா ஒரு பிளாட் வாங்கி கொடுத்திருக்கிறார்.

நிக் கூறுகையில், நான் வெற்றியடைவதற்குக் காரணம், என் தோல்வியை கண்டு நான் பயப்படவில்லை, நான் மிகவும் விடாமுயற்சியுடன் இருக்கிறேன், அதை ஒருபோதும் கைவிடவில்லை.

நான் அமெரிக்காவுக்கு வருவதற்கு 500 டொலர்களை எனக்கு கொடுத்த மறைந்த எனது பாட்டியை என்றும் மறக்கவே மாட்டேன் என கூறியுள்ளார்.