இலங்கையில் இதுவரை 627 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர (Shavendra Silva) சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 544,012 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 339 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இதுவரை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 514,573 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,821 ஆக அதிகரித்துள்ளது.