பிக் பாஸ் நிகழ்ச்சியில் செண்பகமே செண்பகமே டாஸ்க்கில் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து விளையாடினார்கள்.
இதில், திடீரென சிபி எல்லை மீறி விளையாட ஆரம்பித்தது பெரும் பரபரப்பை கிளப்பியது.
சிபி அப்படி விளையாடி இருக்கக் கூடாது என்றும் பெண்கள் மீது பிசிக்கல் வயலென்ஸ் செய்தது போல அவருடைய கேம் இருந்ததாக வீடியோக்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
#Ciby is being unnecessarily violent!
Very violent and very disappointing!After seeing this , #Niroop started to play violently #BiggBossTamil#BiggBossTamil5 #BiggBossTamil pic.twitter.com/lmnGtWlFcx
— குருநாதா⚡⚡ (@gurunathaa4) November 5, 2021
பிரியங்காவிடம் இருக்கும் பால் பாட்டிலை பிடுங்கி தங்கள் அணியினரிடம் தூக்கிப் போட்டு அவரை தள்ளி விட்டு ஒரே அதகளம் செய்து விட்டார் சிபி.
மேலும், நீல நிற உடை அணிந்து இருந்த அணியினர் பாதுகாத்து வைத்திருந்த ஏரியாவிலும் சென்று முதல் நபராக பால் பாட்டிலை திருட அவர் முயற்சித்தது தான் கேமயே கெடுத்தது.
பசு மாட்டிடம் பால் கரந்து கொண்டிருந்த அக்ஷராவிடம் இருந்தும் பாலை பறிக்க முயன்றார் சிபி. பதிலுக்கு, அக்ஷராவும் சிபியுடன் மல்லுக்கட்ட இருவருக்கும் இடையே ஒரு பெரிய மோதலே வெடித்தது.
கேமுக்கான ஒரு சரியான ரூல்ஸை போட்டுக் கொண்டு விளையாடி இருந்தாலே இந்த கூச்சலும் குழப்பமும் வந்திருக்காது என்று பார்வையாளர்கள் கூறி குறும் படம் போட்டுள்ளனர்.