நாட்டில் கொரோனோ மரணங்கள் மேலும் அதிகரிப்பு!

நாட்டில் மேலும் 20 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 10 ஆண்களும், 10 பெண்களும் அடங்குகின்றனர்.

30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 3 ஆண்களும், 3 பெண்களும் என 6 பேர் மரணித்தனர். 60 வயதுக்கு மேற்பட்ட 7 ஆண்களும், 7 பெண்களும் என 14 பேர் மரணித்தனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் கோவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 13,841ஆக அதிகரித்துள்ளது.