தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் தான் ஜெய் பீம்.
இப்படம் வெளியானது முதல் அனைவரிடமும் மிக சிறந்த விமர்சனங்களை பெற்று பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
மேலும் இப்படத்திற்கு முன் வெளியான சூரரை போற்று திரைப்படமும் இதேபோல் OTT-யில் தான் வெளியானது.
இந்நிலையில் சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள எதற்கும் துணிந்தவன் மற்றும் வாடிவாசல் திரைப்படங்களின் ரிலீஸ் குறித்து சூர்யா பேசியுள்ளார்.
அதில் “வாடிவாசல் மற்றும் எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படங்கள் கொண்டாடப்பட வேண்டியவை, இந்த இரண்டு திரைப்படங்களும் திரையரங்களில் தான் வெளியாகும்” என கூறியுள்ளார்.