கொரோனாவால் பாதிப்புக்குள்ளான ரோஜா சீரியல் நடிகைகள்

சன் தொலைக்காட்சியின் TRPயில் முதல் இடத்தில் இருப்பது ரோஜா சீரியல் தான். இந்த தொடர் ஹிட்டாக ஓட கதையில் மிகவும் தெளிவான விஷயங்களை புகுத்தி வருகின்றனர்.

ரசிகர்கள் கதை எப்படி வைத்தால் பார்க்கிறார்கள், எப்படியெல்லாம் கதைக்களம் அமைக்கலாம் என பல பிளான்களுடன் தொடரை எடுக்கிறார்கள்.

ஹிட்டாக சீரியல் ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில் இதில் நடித்துவரும் அக்ஷயா, காயத்ரி இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அதோடு சீரியல் நாயகன் சிப்புவிற்கு இது தல தீபாவளி என்பதால் அவரும் நிறைய இடைவேளையில் எடுத்துள்ளாராம்.

இதனால் சீரியல் குழுவினர் கொஞ்சம் சோகத்தில் இருக்க ரசிகர்கள் அனைவரும் சீக்கிரம் குணமாக வேண்டும் என பிராத்தனை செய்து வருகிறார்கள்.