வெந்தயம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதிலும் உடல் சூட்டுக்கு வெந்தயம் அதிமருந்தாக திகழ்கிறது.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல வெந்தயத்தை அளவுக்கு மீறி சாப்பிட்டால் பிரச்சினை தான். வெந்தயம் குளிர்ச்சித்தன்மை கொண்டது என்பதால் உடல் ஆரோக்கிய குறைபாடு இருக்கும் காலங்களில் இதை எடுத்துகொண்டால் இவை மூச்சுத்திணறல் பிரச்சனையை உண்டு செய்யும்.
குறிப்பாக சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் வெந்தயத்தை பயன்படுத்தும் போது அதிக கவனம் தேவை. உணவில் சேர்த்து பயன்படுத்தும் போது பிரச்சனை நேராது. ஆனால் தனித்து சருமத்துக்கு, கூந்தலுக்கு உள்ளுக்கு என்று எடுக்கும் போது இதன் குளுமை உடலில் அதிகரிக்கும்.
குறிப்பாக மழைக்காலங்களில் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கை வைத்திய முறையில் வெந்தயத்துக்கும் பங்குண்டு என்றாலும் தானாக பயன்படுத்த கூடாது எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டிருக்கும் வெந்தயம் சிலருக்கு மட்டும் ஒவ்வாமையை உண்டு செய்கிறது.
வெந்தயத்தை தனித்து அதிகளவு எடுக்கும் போது ஹார்மோன் உணர்திறன் அதிகரிக்கும் சக்தியை உண்டாக்குகிறது. குறிப்பாக ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன். புற்றுநோய், ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுப்பவர்கள் வெந்தயத்தை தனித்து எடுக்கும் போது அவர்களது உடலில் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும். உடலில் நோய் ஏற்பட்டு பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து கொள்பவர்கள் வெந்தயத்தை எடுத்துகொள்ளலாம்.
ஆனால் அளவாக எடுத்துகொள்ள வேண்டும். அளவாக எடுத்தால் உடலில் நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தமாக வைக்க உதவுகிறது. அளவு அதிகமானால் கடுமையான ஒவ்வாமையை உண்டாக்கும் வாய்வுக் கோளாறுகள் உடலில் உண்டாக்கும் உபாதை குறித்து சொல்லி தெரியவேண்டியதில்லை.
அதிகப்படியான வாய்வு உடலினுள் இருக்கும் போது அவை மூட்டுகளில் தேங்கி அங்கு வீக்கத்தையும் வலி உபாதையும் உண்டாக்குகின்றன. அதிக அளவு வெந்தயம் எடுத்துகொள்ளும் போது அவை உடலில் வாய்வு அளவை அதிகரிக்க கூடும். உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றூம் சமநிலையில் இருக்க வேண்டும்.
அதனால் வாய்வு அதிகமாகும் போது பிரச்சனைகள் அதிகரிக்கவே செய்யும். குறிப்பாக வாய்வு கோளாறுகள் பிரச்சனை இருப்பவர்கள் வெந்தயத்தை தனித்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
நீரிழிவு நோயாளிகள் வெந்தயத்தை எடுத்துகொள்ளும் போது தினமு. 2.5 கிராம் முதல் 15 கிராம் வரை எடுத்துகொள்ளலாம். ஆனால் அவ்வபோது நீரிழிவு பரிசோதனை செய்வதும் நல்லது.