எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை கூடவே மாட்டேங்குதே என சிலர் புலம்புவதை நாம் பார்த்திருப்போம். இதற்கான காரணத்தை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
அதன்படி, சிறந்த உணவு பழக்கம் அல்லது வாழ்க்கைமுறையை உடையவர்களைவிட, குறிப்பிட்ட சில மரபணுக்களை உடையவர்கள் ஒல்லியாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை கூடவே மாட்டேங்குதே என சிலர் புலம்புவதை நாம் பார்த்திருப்போம். இதற்கான காரணத்தை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். அதன்படி, சிறந்த உணவு பழக்கம் அல்லது வாழ்க்கைமுறையை உடையவர்களைவிட, குறிப்பிட்ட சில மரபணுக்களை உடையவர்கள் ஒல்லியாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உடல் பருமன் குறியீட்டு எண் (BMI) 18ஐ விட குறைவான அளவுடைய பிரிட்டனை சேர்ந்த 1600 பேரிடமிருந்து மரபணு மாதிரிகள் பெறப்பட்டு, மிகவும் குண்டான 2,000 பேர், சராசரியான உடல் எடையை கொண்ட 10,000 பேருடன் அது ஒப்பிடப்பட்டது.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களிடம் அவர்களது உணவு பழக்கவழக்கங்கள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. உடல் பருமன் உடையவர்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட தொகுப்பு மரபணுக்களை கொண்டிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
ஒல்லியாக இருப்பவர்கள் உடல் பருமனோடு தொடர்புடைய மரபணுக்களின் தொகுப்பை குறைவாக கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, ஆரோக்கியமான முறையில் ஒல்லியாக இருப்பதற்கு உதவும் மரபணு அமைப்பில் மாற்றங்களும் இருந்தன.
இந்த ஆராய்ச்சியின் தலைமை ஆராய்ச்சியாளரான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் சடாஃப் பாரூக்கி, இந்த ஆராய்ச்சியின் மூலம் ஒருவர் ஒல்லியாக இருப்பதற்கு சிலர் கூறுவதுபோல் உணவுப்பழக்கமும், வாழ்க்கைமுறையும் காரணமில்லை என்பதும், அந்த குறிப்பிட்ட நபரின் உடலிலுள்ள மரபணுக்களில் உடல்பருமனை நிர்ணயிக்கும் தொகுப்பு குறைவான எண்ணிக்கையில் இருப்பதே காரணமென்பது முதல் முறையாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.