வீட்டிற்கு வாடகை தாராத காரணத்தினால் வீட்டின் ஓனர் வீட்டை பாம்பைக் கொண்டு பூட்டியுள்ள புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.
கென்யாவின் தென்கிழக்கில் அமைந்துள்ள திரைநகரத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
வீட்டு ஓனர் ஒருவர் தனது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் நபர் செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் வாடகை கொடுக்காத காரணத்தினால் இப்படியொரு வினோத செயலை செய்து வீட்டினை பூட்டியுள்ளார்.
பச்சைப் பாம்பு ஒன்றினை வைத்து வீட்டினை பூட்டியுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.