தொலைபேசியில் உரையாடியபடி தண்டவாளத்தில் நடந்து சென்ற இளைஞன், புகையிரதம் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (07) மாலை இடம்பெற்றுள்ளது.
தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, முள்ளிப்பொத்தானை, 95ஆம் கட்ட, சதாம் நகரை சேர்ந்த ஹமீத் முபீத் (20) என்பவரே உயிரிழந்துள்ளார்.
விபத்துக்குள்ளான நபர் தொலைபேசியில் ஹெட்போன் அணிந்தவாறு பேசிக்கொண்டிருந்ததாகவும், சக நண்பர்கள் புகையிரதம் வருவதை அவதானித்து கூச்சலிட்டதாகவும் ஹெட்போன் அணிந்திருந்தமையினால் அவருக்கு சரியாக கேட்காத நிலையில் இருவரும் அவரை நோக்கி ஓடிய போதும் ரயில் வேகமாக அவரை மோதியதாகவும் சக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளானவரின் தலை துண்டிக்கபட்ட நிலையில் சடலம் கந்தளாய் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.