கடல் உணவுகளில் பெரும்பாலானவர்களுக்கு பிடித்த ஒன்று இறால். அதில் சுவையான சுக்கா எப்படி செய்வது என பார்போம்.
தேவையானவை:
இறால் –அரை கிலோ
தேங்காய் – 1/2 கப்
வரமிளகாய் – 5
பூண்டு – 4-5
கறிவேப்பிலை – சிறிதளவு
சோம்பு – 2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 4 ஸ்பூன்
வெங்காயம் – 1
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகுத் தூள் – 2 ஸ்பூன்
கரம் மசாலா – 1 ஸ்பூன்
செய்முறை:
இறாலை நன்றாக சுத்தம் கொள்ளவும். பின்னர் வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும். தேங்காய், வரமிளகாய், சோம்பு, பூண்டு, கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணையை ஊற்றி அது காய்ந்ததும் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் அதனுடன் இறால், மஞ்சள் தூள், உப்பு ஆகியவை ஒன்றுடன் ஒன்று சேரும் வரை கிளற வேண்டும்.
அதனுடன் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்க்கவும். சிறிது நேரம் வேகவிட்டு அதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி இறக்கினால் இறால் சுக்கா தயார்.