ஹோட்டல் ஸ்டையில் மட்டன் சால்னா.. எப்படி செய்வது!

பொதுவாக கடைகளில் வாங்கும் சால்னா என்றால் சிலருக்கு நிரம்ப பிடித்தமான ஒன்றாகிறது. அதனை வீடுகளிலேயே எப்படி செய்யலாம் என பார்போம்.

தேவையானவை:

மட்டன் – கால் கிலோ

பட்டை

கிராம்பு

சோம்பு

துவரம் பருப்பு

பெரிய வெங்காயம்,

தக்காளி

இஞ்சி பூண்டு பேஸ்ட்

மஞ்சள் தூள்

மிளகாய் தூள்

மல்லி தூள்

உப்பு

தேங்காய் விழுது

செய்முறை:

முதலில் காய்கறிகளை நறுக்கி கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து அதில் பட்டை, கிராம்பு, சோம்பு, பிரியாணி இலையை போட்டு தாளிக்கவும். பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

பின்னர் அதில் தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்க வேண்டும். அதன் பிறகு சுத்தம் செய்து வைக்கப்பட்ட மட்டனை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.

அத்துடன் துவரம் பருப்பை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு குக்கரை மூடி கொதிக்கவிடவும் அதனுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து இறக்கினால் தயார்.