சென்னையில் ஏற்ப்பட்டுள்ள வெள்ளத்திற்கு இதுதான் காரணமாம்

தமிழகத்தில் கனமழை பெய்து வருவதன் விளைவாக சென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட, இயல்பு வாழ்க்கையை இழந்து சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படுகின்றனர் மக்கள்.

இந்நிலையில் இதற்கெல்லாம் யார் காரணம்? மழை நீர் வடியாமல் தேங்குவது ஏன்? அரசு அலட்சியமாக இருக்கிறதா? என்றெல்லாம் விவாதங்கள் எழாமலும் இல்லை.

இதற்கிடையே 1980ம் ஆண்டு இருந்த வேளச்சேரி ஏரியின் புகைப்படம் வைரலாகி வருகிறது, அதுவே 1996ம் ஆண்டு முக்கால்வாசி குடியிருப்புகளாக மாறி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

அந்த காலத்தில், வேளச்சேரி ஏரியில் உள்ள தண்ணீரானது இந்த விளைநிலங்கள் வழியாக பாய்ந்து சென்று பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு சென்று அங்கிருந்து ஒத்தியம்பேட்டை வழியாக கடலில் கலக்கும். இது தான் இயல்பாக இருந்துள்ளது.

ஆனால் தற்போதைய காலத்தில் விளை நிலங்கள் அனைத்தும் குடியிருப்புகளாக மாறிவிட்டதால், மழைகாலத்தில் அங்கு மழைநீர் தேங்கி வெள்ளக் காடாக மாறுகிறது.

இப்படித்தான் கொளத்தூர் பகுதியில் இருந்த ஏரி கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குட்டை போல தற்போது, மாறிவிட்டது.

இந்த புகைப்படங்களை பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் சென்னையின் நிலையை நினைத்து கண்ணீர்வடித்து வருகின்றனர்.