கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே உள்ள அரசு பள்ளி ஒன்றில் +1 படிக்கும் மாணவன் ஒருவன் அவனுடன் படிக்கும் சக மாணவி ஒருவருக்கு வகுப்பறையில் வைத்து தாலி கட்டியுள்ளான்.
கடந்த 3ம் தேதி மூன்றாம் தேதி நடந்த இந்த சம்பவத்தை அந்த மாணவன் வீடியோவாக எடுத்து வாட்ஸப் ஸ்டேசலில் வைத்துள்ளான். இதனை கண்ட சகமாணவர்கள் அதனை பதிவிறக்கம் செய்து மற்றவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவவே மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள் தலைமையாசிரியரிடம் புகார் அளித்தனர். அவர்களை பள்ளியில் இருந்து நிர்வாகம் இடைநீக்கம் செய்தது.
மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினரிடம் , நீண்ட நாள் கழித்து பள்ளி திறந்ததால் வித்யாசமாக செய்ய நினைத்து இதனை செய்ததாகவும் தன்னை விட்டுவிடுமாறும் கெஞ்சியுள்ளார்.
மேலும், அந்த மாணவியின் பெற்றோரும் இதனை பெரிதுபடுத்த வேண்டாம் என கேட்டு கொண்டதால் அவர்கள் அந்த மாணவனிடம் எழுதி வாங்கி கொண்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.