ஜெய் பீம் படத்திற்கு இந்திய நீதித்துறையிடம் இருந்து கிடைத்த பாராட்டு!

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 2-ல் ஜெய் பீம் திரைப்படம் நேரடியாக OTT தளமான அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகியிருந்தது. படத்தை TJ ஞானவேல் இயக்கி, சூர்யா ஜோதிகாவின் 2D நிறுவனம் தயாரித்திருந்தது.

இருளர் சமூதாயத்தை சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து போராடும் கதையை தங்களின் அற்புதமான நடிப்பால் இந்தியா முழுவதும் பேசும்வகையில் கொண்டுபோய் சேர்த்திருக்கின்றனர்.

இருளர் சமூதாயத்தை சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து போராடும் கதையை தங்களின் அற்புதமான நடிப்பால் இந்தியா முழுவதும் பேசும்வகையில் கொண்டுபோய் சேர்த்திருக்கின்றனர் படத்தில் நடித்த சூர்யா, லிஜோமோல், மணிகண்டன் பிரகாஷ்ராஜ் போன்றோர்.

தற்பொழுது இந்த படத்தை பார்த்த இந்திய நீதி துறையின் அங்கமான தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தங்களின் பாராட்டை தெரிவித்துள்ளது.

அதில் “வழக்கறிஞர் தொழிலின் மகத்துவத்தை எடுத்துரைக்கிறது” என குறிப்பிட்டிருக்கின்றார்.