நாட்டின் வானிலை மாற்றம்!

நாட்டில் நிலவி வரும் மழையுடனான காலநிலை குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறைக்கு வடக்கே 250 கிலோ மீற்றர் தொலைவில் வங்களா விரிகுடாவில நிலவி வரும் தாழமுக்க நிலை, வடக்கு தமிழக கரையோரப் பகுதியை இன்று மாலை கடக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேல், சபரகமுவ, வடமேல், மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வட மத்திய மாகாணத்திலும் சிறிதளவு மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் 50 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. மணிக்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.