சீரற்ற வானிலை காரணமாக 630 பாடசாலைகள் மூடல்.. வெளியான தகவல்!

நாடாளவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக 630 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் 444 பாடசாலைகளும், மேல் மாகாணத்தின் புத்தளம் கல்வி வலயத்தில் 37 பாடசாலைகளும், சிலாபம் மற்றும் கிரிஉல்ல ஆகிய வலயத்தில் 11 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக மாகாண கல்வி இயக்குனர் ஜயலத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கிரிஉல்ல வலய கல்வி அலுவலகம் நீரில் மூடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மேல் மாகாணத்தில் களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் 15 பாடசாலைகளும் சப்ரகமுவ மாகாணத்தில் எலபொத்த பிரதேசத்தில் 5 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 105 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அனர்த்த நிலைமை காரணமாக பாடசாலைகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை. வெள்ள நிலைமை காரணமாக மாத்திரமே பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அந்த பிரதேச கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.