வசூல் வேட்டையில் சரவெடி கொளுத்திய அண்ணாத்த : ஒரே வாரத்தில் இத்தனை கோடியா?

நடிகர் அஜித்தை வைத்து 4 படத்தை இயக்கிய சிறுத்தை சிவாவின் அடுத்த படைப்புதான் அண்ணாத்த. சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

முதல்நாள் விமர்சனத்தை பார்த்த போது படம் அதோகதி தான் என கூறப்பட்ட நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் நான்தான் உச்சம் என நிரூபித்து காட்டியுள்ளார். படம் வெளியான முதல் வாரத்திலேயே 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.

4 நாட்களில் 100 கோடி வசூலை தாண்டியதாக ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது. எப்படியோ விமர்சனம் வைத்த வாய்க்கெல்லாம் வசூல் பூட்டுப் போட்டுள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.