தளபதி 66 படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

தளபதி விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

இப்படத்தை தொடர்ந்து விஜய் தெலுங்கில் பிரபலமான இயக்குனராக விளங்கும் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் தளபதி 66 படத்தின் இசையமைப்பாளர் நீங்களே தானா என ட்விட்டரில் இசையமைப்பாளர் தமனிடம் கேட்டுள்ளார்.

அதற்கு தமன் ‘Fingers Crossed’ என பதிலளித்துள்ளார், இதை வைத்து ரசிகர்கள் தற்போது இவர் தான் இசையமைப்பாளராக இருக்கும் என கூறிவருகின்றனர்.