வவுனியாவில் ஆசிரியர்கள் உட்பட பல மாணவர்களுக்கு கொரோனா…

வவுனியாவில் இதுவரை ஆசிரியர்கள் இருவருக்கும், 8 மாணவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தமது உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றங்களை தொடர்ந்து சுயமாக அவர்கள் முன்வந்து மேற்கொண்ட அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் போதே அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்ட இரு ஆரம்ப பிரிவு ஆசிரியர்களும் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய ஆசிரியர்கள் என்பதுடன், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வௌவேறு பாடசாலைகளை சேர்ந்தவர்களாவர்.

எனவே, பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் சுகாதார நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றி செயற்படுமாறும் சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.