கன்னியாகுமரி மாவட்டம் பனைநின்றவிளைவீடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (26). இவர் அந்த பகுதியில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது இளம்பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரில் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் அவர் அபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை செய்ததாகாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, சுரேஷிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
சுரேஷ் பேஸ்புக்கில் மற்றும் வாட்ஸ் அப்பில் பல போலி கணக்குகள் வைத்துள்ளார். பெண்கள் பேரில் பேஸ்புக்கில் போலி கணக்கு துவங்கி அதில் பல பெண்களுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.
பெண் போல பேசி அவர்களின் கைபேசி எண்ணை முதலில் வாங்கி விடுவான் அதன் பின் அவர்களிடம் தனது சுய ரூபத்தை காட்டா தொடங்குவான். அவர்களுக்கு தனது ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொல்லை செய்து வருவான்.
இதனை கண்டித்து அவனை பிளாக் செய்யும் பெண்களை பழிவாங்க அவர்களது புகைப்படங்களை தவறாக சித்தரித்து பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இதனால், பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து அவனை கைது செய்த காவல்துறையினர் அவனிடம் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இது போன்ற சைக்கோகளை அனைவரும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என காவல்துறையினர் கேட்டுகொண்டுள்ளனர்.