பேரீச்சம்பழம் எடுத்துக்கொள்ள வேண்டிய அளவுகள்

தினமும் பேரிச்சை பழம் சாப்பிடுவதால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன.

பேரிச்சையில் பினோலிக்ஸ், கரோட்டினாய்டுகள், இரும்புச் சத்து, பொட்டாசியம், செலினியம், மெக்னீசியம், தாமிரம், வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி, டயட்டரி பைபர், புரதச் சத்து, பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் போன்ற ஊட்டச்சத்துகள் ஏராளமாக உள்ளன.
இதனால் நீரிழிவு நோயாளிகள் கூட அச்சமின்றி தினமும் ஒன்று அல்லது இரண்டு பேரிச்சை பழத்தினை சாப்பிடலாம்.

நன்மைகள்
பேரிச்சம் பழத்தில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் இருப்பதால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு ஆரோக்கியமாகும்.
பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம் உள்ளதால் பக்கவாதம் வரும் வாய்ப்பு குறையுமாம்.
பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.
பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து உள்ளதால் இரத்த சோகை உள்ளவர்கள் உட்கொண்டு வருவது நல்லது.
ஒல்லியாக இருப்பவர்கள், குண்டாவதற்கு பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் போதும். நிச்சயம் குண்டாகலாம்.
அதுமட்டுமின்றி, ஆல்கஹால் குடித்து உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் பேரிச்சம் பழம் உதவும்.

நீரிழிவு நோயாளிகள் எத்தனை பேரிச்சை பழம் சாப்பிட வேண்டும்?
சர்க்கரை வியாதி பாதித்தவர்கள் பேரிச்சம் பழங்களை சாப்பிடலாம்.

சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த பொதுவாக நார்ச்சத்து அதிகமுள்ள உணவை சாப்பிடவேண்டும்.

அப்படி பார்க்கையில் பேரிச்சை பழங்களில் நார்ச்சத்து மிகவும் அதிகமாக இருக்கிறது. தினமும் இரண்டு முதல் மூன்று பழங்கள் மட்டுமே சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த நன்மை விளைவிக்கும்.

ஆனால் பேரீச்சம்பழங்களில் சத்துக்கள் நிறைந்து இருந்தாலும் அதில் கலோரிகள் மிகவும் அதிகமாக இருக்கிறது.

எனவே தேவையான அளவு உடற்பயிற்சி செய்து கலோரிகளை கரைத்து விட்டால், நீங்கள் பேரிச்சபழம் சாப்பிடுவதில் எந்த பிரச்சினைகளும் உங்களுக்கு ஏற்படாது