புத்தளத்தில் இரவில் இடம்பெற்ற விபத்து: 2 பேர் படுகாயம்!

புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவ்விபத்து சம்பவம் புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் இன்று இரவு (12) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து தெரியவருவது, பாலாவி பகுதியிலிருந்து புத்தளம் நோக்கி பயணம் செய்த முச்சக்கர வண்டியொன்று, முன்னால் சென்ற மற்றுமொரு முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முற்பட்ட போது வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து சம்பவத்தில் முந்திச் செல்ல முற்பட்ட முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் காயமடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற இடத்தில், இரண்டு முச்சக்கர வண்டிகளின் தரப்பினர்கள் ஒன்று கூடியமையால் அங்கு சில நிமிடங்கள் பதற்ற நிலை காணப்பட்டது.

சம்பவ இடத்திற்கு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் வருகை தந்ததால், நிலமை சுமூகமானதுடன் ஆங்காங்கே கூடிநின்றவர்கள் களைந்து சென்றனர்.

இவ்விபத்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணையை புத்தளம் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.