இன்று நாட்டின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.2 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வருமானம் இன்றி நாட்டை முன்னேக்கிகொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் கணிசமான அளவு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், விவசாய சமூகத்தின் உரப்பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் தீர்வை வழங்கும் என நம்புவதாக அவர் கூறினார்.
இந்த வருடத்திற்கான வரவு செலவு திட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.