நாட்டின் வானிலை மாற்றம்!

சப்ரகமுவ, வடமேல், மத்திய, வடக்கு மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இதனிடையே, தெற்கு அந்தமான் கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விரிவடைந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் பெருமளவில் நகர்கிறது,

நவம்பர் 15ம் திகதி வடக்கு அந்தமான் கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இந்த அமைப்பு தொடர்ந்து விரிவடைந்து, மேற்கு மற்றும் வடமேற்காக பெரிதும் நகர்கிறது, நவம்பர் 18ம் திகதி இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரையை அடையும் திறன் கொண்டது.

இந்நிலையில், நாட்டின் கிழக்கில் உள்ள ஆழ்கடல் மீனவ சமூகம் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து மன்னார், புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

காங்கேசன்துறையிலிருந்து மன்னார், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவும் ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவும் காணப்படும்.

கடற்பரப்புகளில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், அவ்வப்போது பலத்த காற்றும் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.