கேரளாவில் மிகப்பெருமளவில் பேசப்பட்ட குற்றவாளியும், இந்தியளவில் போலீஸால் தேடப்பட்ட குற்றவாளி சுகுமார குரூப்பின் செய்த கொலை மற்றும் ஏமாற்று வேலைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் ‘குரூப்’. இத்திரைப்படம், தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நேற்று வெளியாகியது.
இப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து ஷோபிதா துலிபலாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அவரது திரையுலக வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
இந்த நிலையில், குரூப் படத்தின் மூலம் பிரபலமான ஷோபிதா துலிபலா, பொது நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்க வந்த போது, ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து வந்தது ரசிகர்களின் தூக்கத்தை பறித்துக் கொண்டுள்ளது. நல்ல உயரமாக இருக்கும் அவருக்கு, இந்த ஆடை மிகவும் செக்ஸியாக இருப்பதாக அவரது ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.