ரோட்டு கடை உணவுகள் என்றால் இங்கு பலருக்கு பிரியமானதாக இருக்கிறது. ரோட்டு கடை ஸ்டைலில் ப்ரேட் சில்லி எப்படி செய்யலாம் என பார்போம்.
தேவையானவை:
பிரெட் – 8
எண்ணெய் –
பூண்டு – 2 tbsp
ஸ்பிரிங் ஆனியன் – 2 tbsp
வெங்காயம் – 1 கப்
குடை மிளகாய் – 1/4 கப்
ரெட் சில்லி பேஸ்ட் – 2 tbsp
தக்காளி சாஸ் – 2 tbsp
சோயா சாஸ் – 1 tsp
வினிகர் – 2 tsp
தண்ணீர்
உப்பு – தே.அ
செய்முறை:
முதலில் உங்களுக்கு வேண்டிய அளவு துண்டுகளாக பிரட்டை வெட்டி கொள்ளுங்கள். பின்னர் அதனை பொறித்து எடுத்து கொள்ளவும்.
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு சிறு துண்டாக நறுக்கி அதில் போட்டு வதக்குங்கள். அதனுடன் குடைமிளகாயை சேர்த்து கொள்ளுங்கள்.
அது வதங்கியதும் அதில் சோயா சாஸ் மற்றும் ரெட் சில்லி பேஸ்ட் சேர்த்து தண்ணீர் விட்டு 5 பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடுங்கள்.அது கெட்டியானதும் பிரேட் துண்டுகளை சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.