சிறு வயதில், நமக்கு நன்மைத் தரும் உணவுகள் எது தீமை தரும் உணவுகள் எது என்பது நமக்கு தெரியாது. நமக்கு பிடித்தமான உணவுகளை விரும்பி சுவைக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்போம்.
ஆனால் நாம் பெரியவர்களாக வளரும் போது நமது உணவு பழக்கத்தைக் கண்காணிக்கத் தொடங்குவோம். நாம் பெரியவர்களாக வளர்ந்தவுடன் நாம் உண்ணும் உணவின் மூலம் பல ஆரோக்கிய கோளாறுகள் உண்டாகத் தொடங்குவதே இதற்குக் காரணம்.
முக்கியமாக அதிக கொழுப்புகளை கொண்ட அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் உயர் கொலஸ்ட்ரால், இதய நோய், கல்லீரல் பாதிப்புகள் உண்டாகிறது.
எண்ணெய் அதிகம் உள்ள மற்றும் கனமான உணவுகளை எடுத்துக் கொண்ட பின்னர் சில விடயங்களை செய்ய வேண்டும்.
அசைவ உணவுகளை சாப்பிட்ட பின்னர் மிகக் கடினமான உடற்பயிற்சி செய்ய வேண்டாம். நடைபயிற்சி மேற்கொள்வது நல்ல பலனைத் தரும். அதிக கலோரிகளை எரிக்க நடைபயிற்சி பயன்படுகிறது.
ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை பருகுவதால் எண்ணெய் உணவு எளிதில் ஜீரணமாகிறது. இதனால் உங்கள் கல்லீரல், வயிறு, மற்றும் குடல் பகுதி சேதமடைவதில் இருந்து பாதுகாக்கப்பட்டு ஆரோக்கியமாக மாறுகிறது.
எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொண்ட பின் குளிர்ந்த பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டாம். எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொண்ட பின், குளிர்ந்த உணவுப் பொருட்களாகிய ஐஸ் க்ரீம், குளிர்பானம், குளிர்ந்த நீர் போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் கல்லீரல், வயிறு, குடல் போன்றவற்றில் எதிர்மறை விளைவுகள் உண்டாகின்றன.
எண்ணெய் உணவுகளின் எதிர்மறை விளைவுகளைப் போக்க சில ஆயுர்வேத தீர்வுகள் உள்ளன.
ஒரு ஸ்பூன் திரிபலா பவுடரை வெதுவெதுப்பான நீரில், அல்லது கோமியத்தில் அல்லது தேனில் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை பருகுவதால் எண்ணெய் உணவுகள் ஜீரணிக்க பெரும் உதவியாக இருக்கும்.
குக்குலு கொழுப்பு அளவைக் குறைக்கவும் மற்றும் உயர் கொழுப்பு உணவால் ஏற்படும் கெட்ட விளைவுகளைக் குறைக்கவும் உதவும் ஒரு மூலிகை ஆகும். இந்த மூலிகை, மாத்திரையின் வடிவில் சந்தையில் விற்பனை செய்யபடுகின்றன. ஆனால் இதனை வாங்கி உட்கொள்வதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனைப் பெறுவது நல்லது.
ஆயுர்வேதத்தின்படி , எண்ணெய் உணவிற்கு தேன் ஒரு சிறந்த மாற்று மருந்தாகும். அசைவ உணவு சாப்பிட்ட பிறகு, கட்டாயமாக சிறிது தேன் சாப்பிடுவது நல்லது.