பாடசாலை மாணவர்களுக்கான பரீட்சை வினாத்தாள் தயாரிப்பில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை கருத்திற்கொண்டு இவ்வாறு மாற்றங்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தரம் 5 புலமைப்பரீட்சை, க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரண தர வினாத்தாள்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் சுற்றறிக்கை எதிர்வரும் காலத்தில் வெளியாகுமென பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.