வெளிநாடு செல்லவுள்ள இளைஞர், யுவதிகளுக்கு மொடோனா தடுப்பூசிகள் ஏற்றும் நிகழ்வு அக்குறணை பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றதுள்ளது.
மேலும் இந்நிகழ்வில் அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் கலந்து கொண்டுள்ளார்.
கண்டியில் உள்ள அக்குறணை பிரதேச சபை கேட்போர் கூடம் கெலிஓய ஜனரஞ்சனாராமய குண்டசாலை சுகாதார வைத்திய அலுவலகம், கண்டி ஈ. எல். சேனநாயக சிறுவர் நூலக கேட்போர் கூடம் போன்ற இடங்களில் 18 – 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
மேலும் இந்த தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான இளைஞர், யுவதிகள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.