தொற்றாத நோய்களுக்குரிய மருந்துகளின் விலை அதிகரிப்பு!

தொற்றாத நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலை 100% – 300% வரை அதிகரித்துள்ளதாக அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மருந்து விலை குறைப்பு உள்ளிட்ட 8 கோரிக்கைகளுக்கு அரசு சாதகமாக பதிலளிக்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவையில் உள்ள 16 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர் என்றார்.