நாட்டில் எரிபொருள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்!

இலங்கையில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு இல்லையென வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) மீண்டும் தெரிவித்துள்ளார்.

நேற்று (13) நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமாயின் அது நிதியமைச்சின் ஊடாகவே முன்னெடுக்கப்படும். கடந்த காலங்களிலும் விலை அதிகரிப்பு தொடர்பான விபரங்கள் மாத்திரமே தம்மால் வெளியிடப்பட்டதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தட்டுப்பாடு இன்றி எரிபொருளை விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.