சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அந்நியன்.
இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து சதா, விவேக், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தில் வெளியான அந்நியன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினை பெற்றது.
இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம், தான் ஒரு சிறந்த நடிகர் என்பதனையும் நிரூபித்தார்.
இந்நிலையில், இப்படத்தில் முதல் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது விக்ரம் கிடையாதாம்.
ஆம், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தானாம்.
அப்போது அவருடைய கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால் இப்படத்தில் அவர் நடிக்கமுடியாமல் போனதாம்.
இதன்பின் தான் சங்கரும், ரஜினியும் சிவாஜி படத்தில் கைகோர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.