தமிழகத்தில் தற்போது திரையரங்குகள் அனைத்தும் திறக்கப்பட்டு 100% இருக்கைகளுடன் திரைப்படங்கள் ரிலீஸாகி வருகிறது.
இதனிடையே டாப் நடிகர்களின் திரைப்படங்களும் தொடர்ந்து வெளியாகி வருகிறது. கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் வெளியானது.
இந்நிலையில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் திரைப்படங்களின் அப்டேட் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி அடுத்த மாதம் வலிமை மற்றும் தளபதி 66 திரைப்படங்களின் அப்டேட் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.