கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை விரைவாக அழிக்கும் நடவடிக்கை அறிமுகப்படுத்தப்படவுள்ளது என ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (Kamal Gunaratne) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் பரிசோதனையின் பின்னர் உடனடியாக நீதிவான் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டு அவற்றில் சில மாதிரிகள் எடுத்து வைக்கப்படும்.ஏனைய அனத்து போதைப்பொருட்களும் நீதிவான் முன்னிலையில் அழிக்கப்படும்.
நீதி அமைச்சும், சட்ட மா அதிபர் திணைக்களமும் இது தொடர்பான ஆரம்பகட்ட பணிகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.