விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது.
இதில் கண் அம்மாவாக ரோஷ்நி ஹரிப்ரியன் நடிக்கிறார் அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். முன்னதாக ரோஷினி ஹரிப்ரியன் நிறைய யூடியூப் குறும்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்து இருக்கிறார்.
View this post on Instagram
அப்போதெல்லாம் கிடைக்காத புகழ் அவருக்கு விஜய் டிவியின் மூலமாகத்தான் கிடைத்தது. இந்த நிலையில் தற்போது ரோஷினி கைப்பிடி எனக்கு கதாநாயகி ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் எனவே அவர் கண்ணம்மா சீரியல் விட்டு விலகி விட்டதாகவும் கூறப்பட்டது. இத்தகைய நிலையில் இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தை ரிப்லேஸ் செய்ய பிரபல மாடல் அழகி வினுஷா தேவி வந்துள்ளார்.
நேற்று இதற்கான புரோமோ வீடியோ வெளியாகியது. இதனை தொடர்ந்து தற்போது வினுஷா தேவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு பாலோயர்கள் அதிகரித்து வருகின்றனர். அவரது இன்ஸ்டாகிராம் புகைப்படங்களும் தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.