இரண்டரை இலட்சம் இலங்கையர்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்… வெளியான முக்கிய தகவல்!

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக அடுத்த வருடத்தில் 250,000 பேரை அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்ததுடன் இந்த வருடத்தில் இதுவரை காலமும் 83 ஆயிரம் பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ள நிலையில் இந்த வருட இறுதிக்குள் அது ஒரு இலட்சமாக அதிகரிக்கப்படும் என்றும் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று (15) திங்கட்கிழமை, அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,

கடந்த சில வருடங்களாக நாட்டில் நிலவிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோர் மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணி வருமானம் குறைந்துள்ளது. டொலர் பிரச்சினைக்கு அதுவும் ஒரு காரணமாகும். அதனை மீண்டும் அதிகரிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட் டுள்ளன.

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பொறுத்தவரையில் இலங்கைக்கு கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன. அந்த நாடுகளுக்கு நாம் பயிற்சி பெற்றவர்களை அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளோம்.

இதற்கமைய வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக அடுத்த வருடத்தில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் பேரை அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.