செட்டிநாடு ஸ்டைல் முருங்கைக்காய் வறுவல்!

முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

முருங்கை காய் உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும். இதை சாப்பிட்டால் சிறுநீரகம் பலப்படும், தாது உற்பத்தி அதிகரிக்கும்.

வாரத்தில் குறைந்தது இரண்டு முறை முருங்கைக்காயை உணவாக எடுத்துகொண்டால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடையும். குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் இருக்கும் கிருமி பூச்சிகள் வெளியேறும்.

இத்தகைய நன்மை கொண்ட முருங்கைக்காயை செட்டிநாடு சுவையில் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
முருங்கைக்காய்-3
சின்ன வெங்காயம்-10
தக்காளி-1 கடுகு-1/4 ஸ்பூன்
மிளகாய் தூள்-1 ஸ்பூன்
மஞசள்தூள்-1/2 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
கறிவேப்பிலை- சிறிதளவு
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி கடுகு போட்டு பொறிய விட வேண்டும்.

பின்பு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும், பிறகு, தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

அதன் பின், மஞ்சள்தூள், மிளகாய் தூள் தேவையான அளவு சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் முருங்கைக்காயை போட்டு நன்கு வதக்கவும்.

பின்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி கொதிக்க வைத்து எடுக்கவும். பின்பு தண்ணீர் நன்கு வற்றிய பின்னர் நன்றாக கிளறி இறக்கினால் சுவையான செட்டுநாடு முருங்கைக்காய் வறுவல் தயார்.