தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஷாலு சௌராசியா.
இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கடைவீதிக்கு சென்றுள்ளார். எல்லாம் வாங்கிவிட்டு இரவு 11 மணி போல் நடந்தபடி வீடு திரும்பியுள்ளார்.
அப்போது திடீரென அடையாளம் தெரியாத நபர்கள் நடிகையை தாக்கியதோடு அவரிடம் இருந்த பணம் மற்றும் சில விஷயங்களை திருடி சென்றுள்ளார்கள்.
இந்த சம்பவம் குறித்து நடிகை போலீசில் புகார் அளிக்க விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடிகைக்கு சில காயங்கள் ஏற்பட்டுள்ளதால் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாராம்.
ஷாலு தெலுங்கில் O Pilla Nee Valla மற்றும் Bhagya Nagara Veedullo Gammatthu போன்ற படங்களில் நடித்துள்ளார்.