தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்த முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை சிம்ரன்.
இவர் தமிழில் வெளிவந்த, VIP படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின், நேருக்கு நேர், வாலி படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பேர் சொல்லும் நடிகையானார்.
தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, கமல் ஹாசன் மற்றும் ரஜினி என பல முன்னணி பிரபலங்களுடன் தொடர்ந்து நடித்து வருகிறார்.
மேலும், தற்போது பிரஷாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகை சிம்ரன், கடந்த 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அழகிய இரு பிள்ளைகளும் உள்ளனர்.
இந்நிலையில் நடிகை சிம்ரன் தனது மகன்களுடன் இருக்கும் சமீபத்திய புகைப்படம் ஒன்று, இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், நடிகை சிம்ரனின் மகன்களா இது..! நன்றாக வளர்ந்துவிட்டார்களே என்று கூறி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..