பொல்லாதவன் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை யார் தெரியுமா?

தமிழில் கடந்த 2007-ம் ஆண்டு பொல்லாதவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக கால்பதித்தவர் வெற்றிமாறன்.

நடிகர் தனுஷ், நடிகை திவ்யா ஸ்பந்தனா, கிஷோர், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்து பெரும் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது பொல்லாதவன் திரைப்படம்.

யதார்த்தமான கதைக்களத்துடன் எடுக்கப்பட்டிருந்த இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். தற்போது இந்த படம் குறித்த யாரும் அறியப்படாத தகவல் ஒன்று தான் வெளியாகியிருக்கிறது.

அதன்படி இந்த படத்தில் திவ்யா ஸ்பந்தனா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் காஜல் அகர்வால் தானாம். எனினும் எதனால் அவர் நடிக்கவில்லை என்ற தகவல் இதுவரை தெரியவில்லை.