புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பிரான்ஸ் அரசு அதிர்ச்சி தகவல்

பிரான்ஸ் வடக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்திருந்திருந்த புகலிடக் கோரிக்கையாளர்களின் முகாமினை அகற்றியுள்ளது.

ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவிற்குச் செல்லும் நோக்கில் பல புகலிடக் கோரிக்கையாளர்கள் வருகை தருவதாக குற்றம் சுமத்தி இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த பகுதிக்கு இன்று அதிகாலை சென்ற பிரான்ஸ் அதிகாரிகள், அங்கு தங்கியிருந்த 1500 புகலிடக்கோரிக்கையாளர்களை அங்கிருந்து அகற்றியதுடன், கூடாரங்களையும் அகற்றியுள்ளனர்.

மேலும் கடத்தலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 13 பேரை கைது செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை 1185 பேர் ஆங்கிலக் கால்வாயினைக் கடந்த பிரித்தானியாவிற்கு செல்ல முற்பட்டிருந்தனர்.

பிரான்ஸ் அதிகாரிகள், புகலிடக் கோரிக்கையாளர்களின் அத்துமீறலைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவில்லை என பிரித்தானிய குற்றம் சுமத்தியுள்ளதுடன், ஆட்கடத்தலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கையும் விடுத்துள்ளது.

அத்தோடு, புகலிடக் கோரிக்கையாளர்களின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பிரித்தானியா சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை பெலரஸ் நாட்டிலிருந்து போலந்திற்குள் நுழைய முற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது போலந்து காவல்துறையினர் கண்ணீர்ப் புகை மற்றும் தண்ணீர்த் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இந்த நிலையில் புகலிடக் கோரிக்கையாளர்கள், போலந்து படையினர் மீது கற்கள் மற்றும் போத்தல்களினால் வீசி எறிந்து தமது ஆத்திரத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

கடந்த சில வாரமாக ஆயிரத்திற்கும் அதிகமான புகலிடக் கோரிக்கையாளர்கள் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து பெலரஸ் நாட்டிற்குள் நுழைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.