நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்றினார். பின்பு ‘தேசமுதுரு’ எனும் தெலுங்கு படத்தில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தார். இப்படத்திற்கு ” சிறந்த அறிமுக நாயகி ” என்ற விருதையும் பெற்றார்.
இவர் தமிழில் ‘எங்கேயும் காதல்’ எனும் படம் மூலம் ஜெயம் ரவி உடன் இணைந்து தன் கலகலப்பான குழந்தை நடிப்பை வெளிக்காட்டினார் . தொடர்ந்து, ‘மாப்பிளை’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘அரண்மனை’ போன்ற படங்களில் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார் .
இவர் ஆரம்பகட்டத்தில் பப்லிமாஸ் போன்று கும்முன்னு இருந்ததை கண்டு தமிழ் வட்டாரத்தில் இவரை “சின்ன குஷ்பு” என்று செல்ல பெயருடன்அழைத்தனர் . ரசிகர்களின் ஆசைகேற்ப சுந்தர்.சி தன் இயக்கித்தில் விஷால் மற்றும் ஹன்ஷிகா நடிப்பில் வெளியான ‘ஆம்பள’ எனும் படத்தில் ஹன்சிகாவுடன் குஷ்புவையும் சேர்த்து ஒரு பாடலில் நடிக்க வைத்தார். தற்போது இவர் ‘மஹா’ எனும் த்ரில்லர் படத்தில் ஸ்ரீகாந்த் உடன் இணைந்து நடிக்கிறார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
இவர் தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகா மாற்றினார். அனால் இவரது ரசிகர்களுக்கு முன்பு இருந்த ஹன்ஷிகாவை தான் மிகவும் பிடித்தது. இருந்தாலும் மார்க்கெட் குறையாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஹன்ஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் modern உடையில் கண்ணாடிமுன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.