பிக்பாஸ் வீட்டிற்குள் காதலா? டாக்ஸ் கொடுத்து கோர்த்துவிட்ட பிக்பாஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மற்றொருவரின் கண்ணாடியாக மாறிவருகின்றனர். இன்று வெளியான டாஸ்கில் ஐக்கியின் கண்ணாடியாக இமான் அண்ணாச்சியும், பிரியங்காவின் கண்ணாடியாக ராஜுவும் இருக்கின்றனர்.

நிரூப்பின் கண்ணாடியாக வருணும், அபினய் சிபியின் கண்ணாடியாக பிரதிபலிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதில் ராஜு பிரியங்காவின் அட்ராசிட்டி வேற லெவல் என்றே கூறலாம்.

மேலும் நிரூப் தனக்கு எதிராக நிற்கும் பாவனியின் மீது தண்ணீர் ஊற்ற முயற்சிக்கின்றார். அவரின் கண்ணாடியாக பிரதிபலிக்கும் வருண் அக்ஷராவின் மீது தண்ணீர் ஊற்றியுள்ளார்.

ஏற்கனவே அக்ஷரா வருண் இருவருக்குமிடையே காதல் ட்ராக் ஓடிக்கொண்டிருக்கின்றது என்று நெட்டிசன்கள் கூறுவதற்கேற்ப இருவரின் செயலும் காணப்படுகின்றது.

மேலும் சமீபத்தில் அக்ஷரா வருணுக்கு தான் அணிந்திருந்த ஆடை பிடிக்கவில்லை என்று கூறிய போது மற்றொரு ஆடையை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.