வைரலாகும் அஜித்தின் சமீபத்திய குடும்ப புகைப்படம்

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகியுள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கக்கூடிய இப்படம், வரும் 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

நடிகர் அஜித் தன்னுடன் இணைந்து நடித்த, நடிகை ஷாலினியை காதலித்து கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் இருவருக்கும் அனுஷ்கா குமார் மற்றும் ஆத்விக் குமார் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் தனது மகள், மகன் மற்றும் மனைவியுடன் சமீபத்தில் தல அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த அழகிய குடும்ப புகைப்படத்தை, அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..