இந்திய அணியின் கேப்டனான விராட் கோலியின் உணவகமான ஒன்8 கம்யூன் என்ற சங்கிலித் தொடர் உணவகத்தில், பாலின சேர்கையாளர் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் குற்றம் சாட்டி இருக்கிறார்.
புனோவில் அமைந்துள்ள உணவகத்தில், பாலினச்சேர்கையாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அந்த அமைப்பினர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு கடும் விமர்சனத்தை வெளியிட்டு இருக்கிறார்.
உணவகங்கள் பாகுபாடு கடைப்பிடிக்கின்றன விராட் கோலி, ஆனால் இது உங்களுக்குத் தெரியாமல் கூட இருக்கலாம், ஆனால் ஒரு பிரிவினருக்கு இடையே இத்தகையை பாகுபாடு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. உங்கள் உணவங்களிலும், மற்ற இடங்களிலும் இத்தகைய பாகுபாடு கடைப்பிடிக்கபடுகிறது.
நீங்கள் உடனடியாக இதை மாற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவகங்களுக்கு இந்த உணர்வை ஊட்டுங்கள், இல்லையேல் பாகுபாடு காட்டும் உணவு விநியோக அமைப்புகளை உங்கள் உணவகங்கள் ஆதரிக்காமல் இருக்கட்டும், என்று இன்ஸ்டாகிராமில் ஓர் பாலினச் சேர்க்கை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, அவர்களின் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த விராட் கோலி உணவக நிர்வாகம், “நாங்கள் பாலின பேதம் பாராட்டவில்லை. மாறாக, தனிப்பட்ட பையன்களுக்கு இங்கு அனுமதி இல்லை என்றுதான் கூறியுள்ளோம்.
இது எதனால் எனில் வளாகத்தில் உள்ள பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டதே தவிர பாலின பேதமெல்லாம் இல்லை” என தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஒன்8 கம்யூன் சார்பில் மறுப்பு தெரிவித்துள்ளதுடன் பாலின பேதம் மட்டுமல்ல மற்ற எந்த பேதங்களும் பாகுபாடுக்கும் இங்கு இடமில்லை என வெளியிட்டு இருக்கிறது.