நாட்டில் எரிவாயு விலையேற்றம், தட்டுப்பாடு மற்றும் மண்ணென்ணய் தட்டுப்பாடு காரணமாக யாழில் விறகுகளுக்கு தற்பொழுது பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ள நிலையில் விறகு வியாபாரமும் சூடு பிடித்துள்ளது.
அதோடு நாட்டு மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கபட்டுள்ள நிலையில் யாழில் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றில் விறகு கட்டி விற்பனையில் ஈடுபடுவதையும் காணமுடிகின்றது.
மேலும் ஒரு சைக்கிள் கட்டு விறகு 1800 ரூபாய்க்கும், ஒரு மோட்டார் சைக்கிள் கட்டு விறகு 2500 ரூபாய்க்கு அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றதாகவும் கூறப்படுகின்றது.