வாழைப்பழ பனியாரம் செய்வது எப்படி

இலங்கை உணவு வகைகள் அன்பு, பன்முகத்தன்மை மற்றும் நறுமணம் என தனித்தன்மை வாய்ந்த சிறப்பு கலவையாகும்.

இலங்கையின் அனைத்து நேர பிரதான உணவும் அரிசி மற்றும் கறிவேப்பிலையைக் கொண்டுள்ளது. தேங்காய் பல உணவுகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

அதுமட்டுமின்றி சில உணவுகள் இனிப்பு, காரம் சேர்ந்தும் காணப்படுகின்றது. அவற்றில் கோதுமை மாவு வாழைப்பழ பனியாரம் எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – அரை கப்

வாழைப்பழம்- 2

தேங்காய் துருவல் – அரை கப்

துருவிய கருப்பட்டி அல்லது துருவிய வெல்லம் – இனிப்புக்கேற்ப

ஏலக்காய்தூள் – ஒரு சிட்டிகை.

செய்முறை :
கோதுமை மாவை நன்றாக கரைத்து கொள்ளவும்.

வாழைப்பழத்தை தோல் உரித்து நன்றாகப் பிசைந்து, அதில் துருவிய தேங்காய், துருவிய வெல்லம், ஏலத்தூள் சேர்த்து நன்றாக கலந்து அதை கரைத்த கோதுமை மாவு கலவையில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

கலவை சற்று கெட்டியாக இருக்கும் படி கரைத்து கொள்ளவும்.

குழிப்பணியார கல்லை அடுப்பில் வைத்து நன்றாக சூடானதும் மிதமான தீயில் வைத்து ஒவ்வொரு குழியிலும் அரை கரண்டி மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும். சுவையான கோதுமை மாவு வாழைப்பழ பணியாரம் ரெடி.