யாழில் நீதிமன்ற பிடியாணைக்கு அமைவாக அருண் சித்தார்த்தை கைது செய்வதற்காக யாழ்ப்பாணம் பொலிசார் சென்றபோது அருண் சித்தார்த் மற்றும் அவரது மனைவி இணைந்து பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹெரோயின் போதைப்பொருள் விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையினை அடிப்படையில் அருண் சித்தார்த்தை கைது செய்வதற்கு யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று அவரது இல்லத்திற்கு சென்றுள்ளனர்.
இதன்போது பொலிஸார் மீது அருண் சித்தார்த் மற்றும் அவரது மனைவி தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த யாழ்ப்பாணம் பொலிஸார் , அருண் சித்தார்த்தை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் கைதான அருண் சித்தார்த்தை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னரே அவர் மீதான சட்ட நடிவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிசார் மேலும் தெரிவித்தனர்.