தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 5 சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நமீதா மாரிமுத்து தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறினார்.
இதேவேளை இந்நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது பிக்பாஸ் வீட்டில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், பிரியங்கா, அபினய் வாடி, பாவ்னி, வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, அக்ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 12 போட்டியாளர்கள் உள்ளனர்.
இவர்களில் இசைவாணி, அபினய், பாவனி, இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, அக்ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 9 பேர் இந்த வார நாமினேஷன் பட்டியலில் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்து வருகிறது.
இதேவேளை, கடந்த சீசன்கள் அளவிற்கு விறுவிறுப்பு இல்லை என்ற கருத்து நிலவுவதால், தற்போது வழங்கப்படும் டாஸ்குகளில் பிடிக்காத ஒருவொருக்கொருவை பிக்பாஸ் கோர்த்து விட்டு பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் வெளியாகியுள்ள மூன்றாவது காணொளியில், ஏராளமான பரிசு பெட்டிகள் உள்ளது. மேலும் டையஸ் வழங்கப்பட்டுள்ளது. இமான் டையஸை போட்டு அதில் வரும் எண்கள் அடிப்படையில் பரிசு பெட்டிகளை திறக்கிறார். முதலில் திறக்கும் பெட்டியில் சிக்கன் இருக்கிறது, இதனை பார்த்து ஹவுஸ் மேட்ஸ் உற்சாகமடைகின்றனர்.
இதை தொடர்ந்து மற்றொரு பெட்டியை திறந்த போது அதிலிருந்து ஒரு நபர் வெளியே வருகிறார். இதனை பார்த்து இமான், தாமரை, பிரியங்கா ஆகியோர் அதிர்ச்சியில் இருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. அந்த நபர் இரண்டாவது நபராக வெளியேற்றப்பட்ட அபிஷேக் ராஜா போலவே தோற்றம் இருக்கிறது.
அபிஷேக் இருந்தவரை அவர் தான் மூன்று காணொளிகளிலும் பெரும்பாலும் காணப்படுவார். ஆனால் அவரது செயல் சக போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி, ரசிகர்களுக்கும் வெறுப்பை ஏற்படுத்தியது.
இதனால் அவருக்கு எதிராக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வந்தனர். இந்நிலையில் அவர் மீண்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்திருப்பது ஹவுஸ் மேட்ஸிற்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாகவே இருக்கிறது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.